என்ற புதிய திட்டத்தினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள்
ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள்
மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும்
ஜூலை 15 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள்
அரசு சேவைகளை பொதுமக்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்ப்பதற்காக
"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள்
அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
“சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய“ போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர்.
"உங்களுடன் ஸ்டாலின்"
திட்ட முகாம்களில்
கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!
முகாம்கள்
43 சேவைகள் (நகர்ப்புறம்)
46 சேவைகள் (ஊரகம்)